ஆணையர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
ரூ.3 கோடி பணிகளை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ஆய்வு
- ரூ.3 கோடி பணிகளை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
- இங்கு போடப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து சோதனை செய்தார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கூடுதல் ஆணையர் ஆனந்தராஜ் பார்வையிட்டார்.
இருக்கன்குடி பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண்புழு உரக்குடில் நாற்றங்கால் மற்றும் பண்ணை கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் மீன் குஞ்சு பண்ணைகள், பிரதமரின் குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றினை ஆய்வுசெய்த கூடுதல் ஆணையர் கத்தாளம்பட்டி பஞ்சாயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பண்ணை குட்டை முள்ளி செவல்லில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் தொகுப்பு வீடுகள் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார் சாலையில் ஆய்வு செய்தார். இங்கு போடப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து சோதனை செய்தார். இந்த நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆணையருடன் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சக்தி முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி, வெள்ளைச்சாமி, உதவி பொறியாளர்கள் நாராயணசாமி, முத்துக்குமார் ராஜ்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.