உள்ளூர் செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 7 பேர் மாயம்

Published On 2023-06-27 13:59 IST   |   Update On 2023-06-27 13:59:00 IST
  • திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் உள்பட 7 பேர் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி தெருவை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது43). இவரது 2-வது மகள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் தனது உறவினரான மவுலி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 9-ந்தேதி திருமணம் நடக்க உள்ளது.

இந்த நிைலயில் அவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கண்ணம்மாள் புகார் கொடுத்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ்(33). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு திரும்பி வந்தபோது வீடு பூட்டி இருந்தது. குழந்தைகளுடன் மனைவி எங்கு சென்றார் என தெரியவில்லை.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி கோபாலன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்(31). இவரது மனைவி அருணா. இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடைக்கு செல்வதாக கூறி சென்ற அருணா மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் முத்தாள் நகரை சேர்ந்தவர் வல்லவராஜ். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் குழந்தை களுடன் மாயமானார். அருகில் வசிக்கும் அன்னக்கிளி என்பவர் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்காளஈஸ்வரியின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன்நகர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி ஆசாரி காலனியை சேர்்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ேஜாதிலட்சுமி(23). அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். இரவில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தவர் அதிகாலையில் மாய மானார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி சீனிவாச நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(40). இவரது மகன் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். வீட்டில் உள்ள உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. எங்கு சென்றார்? என தெரியவில்லை. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் மேட்டமலையை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் காமாட்சி பட்டாசு ஆலையில் வேலை பார்்த்து வருகிறார். அங்கு அவருக்கு விக்கி என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென மாய மானார். உறவினர்கள் விசாரித்ததில் விக்கியும் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News