6 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
- 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 பேர் கைதானார்கள்.
- போலீசார் ரோந்து சென்றனர்.
விருதுநகர்
சூலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டதில், அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தியது தூத்துக்கு டி மாவட்டம் சிவகளை மண்கோட்ட புரத்தை சேர்ந்த ராஜூ என்ற ராஜபாண்டி (வயது29), சேலம் கீழநாயக்கன் பட்டியை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(23) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சா கடத்தலில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெரிய புளியம்பட்டி முள் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசரித்தபோது, கஞ்சா விற்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் விசாரணையில், அந்த வாலிபர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்தனம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (22) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.