அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை
- அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் செங்குன்றா புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராகவன்(வயது 43). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கிளையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
குடும்ப தேவைக்காக ராகவன் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் மன உளைச்சலில் இருந்த ராகவன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை.
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராகவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பாக்கி யராணி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்தவர் சரவணன் (33). கடந்த சில மாதங்களாக இவருக்கும், இவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.இதில் விரக்தியடைந்த சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தாழையூத்துபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(25). மது பழக்கத்துக்கு அடிமை யான இவர் சம்பவத்தன்று மது குடிக்க பணம் தருமாறு தாயிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார். இதில் விரக்தியடைந்த மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.