உள்ளூர் செய்திகள்

இடமாற்றம் வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

Update: 2022-07-03 11:47 GMT
  • இடமாற்றம் வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • முனியாண்டி, பழனியம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருது நகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது40) இவரது மனைவி விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மங்காபுரத்தை சேர்ந்த முனியாண்டி, அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் பிரபாகரன் மனைவிக்கு இடமாற்றம் வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ. 5 லட்சம் கேட்டு உள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரபாகரன், கடந்த 2018-ம் ஆண்டு முனியாண்டியிடம்ரூ.3 லட்சம் கொடுத்து உள்ளார். அதன் பின்னர் மனைவிக்கு இடமாறுதல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பிரபாகரன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் முனியாண்டி கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி பிரபாகரன் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முனியாண்டி, பழனியம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News