உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி.

காரைக்கால் செல்லூர் கிராமத்தில் சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-03-07 14:37 IST   |   Update On 2023-03-07 14:37:00 IST
  • காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
  • இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

புதுச்சேரி:

காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

Tags:    

Similar News