உள்ளூர் செய்திகள்
காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
வடமதுரை அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் மறியல்
- சித்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கப்பட விலலை.
- இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் எரியோடு நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள இ.சித்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கப்பட விலலை.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் எரியோடு நெடுஞ்சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலிக்குடங்களுடன் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தற்காலி கமாக டிராக்டர் மூலம் தண்ணீர் தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்ப ட்டது.
இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.