- முதியோர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கண்டுபிடித்து,மருத்துவ உதவியை அளிக்க வேண்டும்.
- பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தங்களை பராமரித்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அண்ணா திருமண மண்டபத்தில் கிராம சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமரன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் முன்னிலை வகித்து அவர் பேசுகையில் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் பற்றியும், பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தங்களை பராமரித்துக் கொள்வது பற்றியும் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பேசுகையில் செவிலியர்கள் அனைவரும் இல்லம் தேடி மருத்துவத்தின் மூலம் முதியோர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கண்டுபிடித்து,மருத்துவ உதவியை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சண்முகப்பிரியன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், கிராம சுகாதார செவிலியர்கள் ரோஜா, ரேவதி, தேவி லட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.