உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து

Published On 2023-03-13 21:37 IST   |   Update On 2023-03-13 21:37:00 IST
  • எந்தவித பதற்றமும் இல்லாமல் நம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
  • உயர் கல்வி கற்க நீங்கள் இன்று முதல் எழுத‌ இருக்கும் பரீட்சை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

கன்னியாகுமரி:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.. உங்கள் கடும் உழைப்பை  காகிதத்தில் பதிவிட இருக்கிறீர்கள். எந்தவித பதற்றமும் இல்லாமல் நம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். குறிப்பாக பன்னிரண்டாம் ஆண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கல்வி வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்த போகிற தேர்வு. உயர் கல்வி கற்க இந்த பரீட்சை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

ஆதலால் மிக கவனமாக கேள்விகளை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து புரிந்து விடையளிக்க வேண்டும். உங்கள் பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசி மற்றும் உங்கள் கடும் உழைப்பு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய வெற்றியை பெற்று தரும். இந்தியாவின் எதிர்கால சிற்பிகளாகிய நீங்கள் கல்வியில் சிறந்து விளங்கி சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News