உள்ளூர் செய்திகள்

கோவை தனியார் ஆஸ்பத்திரி தலைவர் உள்பட 5 பேரிடம் விடிய, விடிய விசாரணை

Published On 2022-06-16 09:26 GMT   |   Update On 2022-06-16 09:26 GMT
  • 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
  • ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

கோவை

கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்( வயது 72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர் (54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததார்.

இந்நிலையில், ராமச்சந்திரன் ரூ. 100 கோடி மதிப்பிலான தனது ஆஸ்பத்திரிையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேரையும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரிடமும் தனித்தனியாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News