உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-27 14:50 IST   |   Update On 2022-07-27 14:50:00 IST
  • விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பேசினர்.

சாத்தான்குளம்:

நீட் நுழைவுத் தேர்வை அகில இந்திய அளவில் கைவிடக் கோரியும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவைகுண்டம் தொகுதி துணை அமைப்பாளர் இரஞ்சன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலாளர் தமிழ்க்குட்டி, காங்கிரஸ் கட்சியின் சாத்தான்குளம் நகர தலைவர் வேணுகோபால், திமுக மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, தொழிலாளர் விடுதலை முன்னணியின் நெல்லை தெற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் இரணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி மாவட்ட பொறுப்பாளர் சரவணன், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர், விவசாய தொழிலாளர், விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி, சாமுவேல், ஆழ்வார் திருநகரி ஒன்றிய துணை அமைப்பாளர் இராமகிருஷ்ணன், இளஞ்சிறுத்தைகள் கண்ணன், முத்துக்குமார், வெற்றிக் கண்ணன், வாசு, இராஜ்குமார், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News