நாமக்கல் வழியாகவேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
- நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதால், ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்குகிறது.
- சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் நாகப்பட்டி னம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளது. மேலும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதால், ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்குகிறது.
இதன் காரணமாக பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப் பதற்காக, பெங்களூரு - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் பெங்களூர் கே.எஸ்.ஆர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது.
வருகிற மே மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7:50 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அன்று இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு மார்க்கமாக சனிக்கிழமை இரவு 11:55 மணிக்கு வேளாங்கண்ணி யில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 11:45 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆர் ரெயில் நிலையம் சென்றடையும்.
ரெயில் எண்.06547 பெங்களூரு - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் முதல் பயணமாக நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வருகிற மே மாதம் 6-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12:49 மணிக்கு வந்து 12:50 மணிக்கு வேளாங் கண்ணிக்கு புறப்படும்.
ரெயில் எண்.06548 வேளாங்கண்ணி - பெங்களூரு சிறப்பு ரெயில் மறு மார்க்கத்தில், நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வருகிற மே மாதம் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5:09 மணிக்கு வந்து 5:10 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்லும்.
இந்த ரெயில் ஏற்கனவே ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வருகிற மே மாதம் முதல் இந்த ரெயில் நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த ரெயிலுக்கு ஆதரவு கொடுத்து, இதன் மூலம் அதிக அளவில் பயணித்தால், இந்த ரெயில் நிரந்தரமாக நாமக்கல் வழியாக இயங்கும் என்று நாமக்கல் ரெயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் சென்னிமலை கூறினார்.