உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடைபெறுவதை படத்தில் காணலாம்.


கடையம் அருகே கால்நடை மருத்துவ முகாம்

Published On 2022-12-20 08:11 GMT   |   Update On 2022-12-20 08:11 GMT
  • கடையம் அருகே உள்ள கோதாண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • கால்நடை மருத்துவர் சொர்ண ராணி கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.

கடையம்:

கடையம் அருகே உள்ள கோதாண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சொர்ண ராணி கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.

முகாமில் பசுமாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மற்றும் சத்து மாத்திரைகள், கிருமி ஒழிப்பு டானிக்குகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News