உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி பகுதிகளில் உள்ள மரங்களில் கொத்து, கொத்தாக காய்த்து தொங்கும் பப்பாளி.

வேப்பனப்பள்ளி பகுதிகளில் கொத்து, கொத்தாக காய்த்து தொங்கும் பப்பாளி

Published On 2022-11-24 10:11 GMT   |   Update On 2022-11-24 10:11 GMT
  • தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.
  • இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிக அளவில் பப்பாளி விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் நீர் வளம் நன்றாக இருப்பதால் கடந்த 6 மாதங்களாக இப்பகுதியில் விவசாயிகள் பப்பாளி விளைச்சலில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஒரு கிலோ பப்பாளி 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருவதால் பப்பாளி நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.

இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

தற்போது பப்பாளி பழங்களை பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News