உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலைய கடைகள் மீண்டும் ஏலம்

Published On 2023-04-30 13:40 IST   |   Update On 2023-04-30 13:40:00 IST
  • டெபாசிட் தொகை குறைக்க வலியுறுத்தல்
  • ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயம்

வேலூர்: 

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மொத்தம் 85 கடைகள் உள்ளன. தாய்மார்கள் உணவளிக்கும் அறை, பணியாளர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக 10 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 75 கடைகள் வணிக நோக்கத்திற்காக உள்ளன.

கடந்த வாரம் கடைகள் ஏலம் விடப்பட்டதில் 8 கடைகள் மட்டுமே எடுக்கப்பட்டன.4 கடைகள், தரை தளத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. திருநங்கைகளுக்கும் ஒரு கடை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடைகளுக்கு டெபாசிட் தொகை ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த பரப்பளவை பொறுத்து டெபாசிட் இருக்கும். தரை தளத்தில் உள்ள கடைகளில் அதிக டெபாசிட் விகிதம் உள்ளது. லாப வரம்பு குறைவாக இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதியதால் ஏலத்தில் பங்கேற்க வில்லை.

"கடைகளுக்கான டெபாசிட் தொகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

டெபாசிட் தொகையைக் குறைப்பது, நகராட்சி நிர்வாகத்தின் சிறப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், 2 வாரங்களுக்குப் பிறகு, கடைகளை மீண்டும் ஏலம் விடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News