உள்ளூர் செய்திகள்

வேலூர் கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் கைது

Published On 2022-12-30 15:46 IST   |   Update On 2022-12-30 15:46:00 IST
  • சாமி நகைகள், கிரீடம் பறிமுதல்
  • வாடகை வீட்டில் தங்கி கைவரிசை

வேலூர்:

வேலூர் செல்லியம்மன் கோவில், பள்ளிகொண்டா நாகாத்தம்மன் கோவில், சாத்துமதுரை முருகன் கோவில்களில் சாமி நகைகள், கிரீடம் கொள்ளை போனது.

மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நகை பணம் கொள்ளை போனது. பல்வேறு கோவில்களில் உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.

திருட்டு கும்பலைப் பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பள்ளிகொண்டா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வேலூர் செல்லியம்மன், சாத்துமதுரை, பள்ளிகொண்டா கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடமிருந்து வேலூர் மாவட்டத்தில் கோவில்களில் திருடப்பட்ட 4½ கிலோ வெள்ளி உள்ளிட்ட நகைகள், சாமி கிரீடம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவை சேர்ந்த கும்பல் அ.கட்டுப்படி கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை கும்பலிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News