உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பை

Published On 2023-06-25 13:57 IST   |   Update On 2023-06-25 13:57:00 IST
  • போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
  • ரூ.85 ஆயிரம் பணம், குழந்தை கால்செயின் உள் ளிட்ட நகைகள் இருந்தன

வேலூர்:

வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் நண்பர் அறிவழகனுடன் கொண வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து பை ஒன்று கீழே விழுந்தது. இதைக்கண்ட வெங்கடேசன் மோட் டார் சைக்கிளை உடனடியாக நிறுத்தி அந்த பையை எடுத் துக்கொண்டு ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றார். போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறிதுதூரத்துக்கு பின்னர் அவரால் அதனை பின்தொடர முடியவில்லை.

ஆட்டோ எதுவென்று தெரியாததால் வெங்கடேசன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அந்த பையை ஒப்படைத்தார். அந்த பையில் ரூ.85 ஆயிரம் பணம், குழந்தை கால்செயின் உள் ளிட்ட நகைகள் இருந்தன. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News