உள்ளூர் செய்திகள்

சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

Published On 2023-03-09 15:10 IST   |   Update On 2023-03-09 15:10:00 IST
  • நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபம்
  • அதிகாரிகள், போலீசார் அஞ்சலி

வேலூர்:

வேலூர் முள்ளிப்பா ளையம் கே.கே. நகரை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 50) வேலூர் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த மாதம் முதல்-அமைச்சர் வேலூர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போதுக்கு அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவப் பரிசோதனை செய்து வந்தார்.

கடந்த 6-ந் தேதி அவரை மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அவரால் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த நரசிம்மன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.

அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

இன்ஸ்பெக்டர் நரசிம்மனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் 15 வயதில் ஒரு மகன், 8 மற்றும் 3 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

Tags:    

Similar News