உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ.8000 அபராதம்

Published On 2022-10-19 15:51 IST   |   Update On 2022-10-19 15:51:00 IST
  • வேலூர் மார்க்கெட்டில் சோதனை
  • 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

வேலூர்:

வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரத் துறையினர் இது சம்பந்தமாக அடிக்கடி ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட் பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து சாமி தலைமையில் நேதாஜி மார்க்கெட் பூ கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது பூக்கள் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது சம்பந்தமாக 35 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது.மேலும் 35 கடைகளின் உரிமையாளர்களுக்கு 8000 ரூபாய் அபராதம் வகித்தனர். தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News