உள்ளூர் செய்திகள்

காட்பாடி வாலிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி

Published On 2023-08-02 14:47 IST   |   Update On 2023-08-02 14:50:00 IST
  • ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வேலூர்:

காட்பாடி, காந்தி நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் திருசீனிவாசன். மகன் கவுசல்ய குமார் (வயது 27). இவருக்கு அப்பில் ஒரு தகவல் வந்தது.

அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை வாய்ப்பு தருவதாவும், கொடுக்கும் பணியை முடித்துக் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை உண்மை என நம்பிய கவுசல்ய குமார் அவர்கள் பகிர்ந்த இணைப்பில் தன்னை பதிவு செய்து கொண்டார். அவர்கள் தளத்தில் அனுப்பும் பணிகளை செய்து கொடுத்தார்.

கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் ஜூலை மாதம் 19-ந் தேதி வரை பணிகளை முடிக்க பல்வேறு நிலைகளில் கவுசல்ய குமார் ரூ.58 லட்சத்து 69 ஆயிரத்து 32 -ஐ மர்ம கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தி வந்தார்.

கவுசல்யா குமாரின் வங்கிக் கணக்கில் பணம் இருப்பது போல் காட்டியது. ஆனால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவுசல்யா குமார் தான் செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டார்.

அதற்கு அவர்கள் மீதமுள்ள பணிகளை முடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும். அதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என பதில் அளித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கவுசல்யகுமார் இதுகுறித்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News