உள்ளூர் செய்திகள்

வேலூர் நேஷனல் தியேட்டர் சர்க்கிளில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் செய்த காட்சி.

வேலூரில் ஆட்டோக்களை நடுரோட்டில் நிறுத்தி போராட்டம்

Published On 2023-02-28 15:15 IST   |   Update On 2023-02-28 15:15:00 IST
  • 10 பேர் கைது
  • ஆன்லைனில் அபராதம் விதிப்பதை கைவிட வலியுறுத்தல்

வேலூர்:

சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 12 மணி முதல் 12.15 மணி வரை வாகனங்களை ரோட்டில் நிறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் நேஷனல் சிக்னல் அருகே ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி போராட்டம் செய்தனர். சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் உள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை அழிப்பது என்ற முடிவை கைவிட வேண்டும். ஆட்டோ, டாக்சி கட்டணத்தை தீர்மானிக்கும் செயலியை அரசு உருவாக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News