மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நேரடி கலந்தாய்வு கூட்டம்
- மாதம்தோறும் 5-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் குறித்த நேரடி கலந்தாய்வு கூட்டம் வேலூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் மாதம் தோறும் 5-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
நேரடி கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவுசெய்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க முடியும், இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.govh இல் OPEN HOUSE- என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்போர் தங்கள் வருகையின்போது ஆதார்அட்டையை தவறாமல் கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.