உள்ளூர் செய்திகள்

போலீசார் சொந்த வாகனங்களில் ஒட்டியுள்ள போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்

Published On 2022-07-20 14:51 IST   |   Update On 2022-07-20 14:51:00 IST
  • அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களும் ஒட்ட கூடாது
  • டி.ஜி.பி. உத்தரவு

வேலூர்:

போலீஸ் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள போலீசார் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் போலீசார் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.

மேலும் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் உடனடியாக அகற்ற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் போலீஸ் அலுவலகங்களில் பணியாற்றும் பணியா ளர்களும் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் தங்களது சொந்த வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News