உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த ஆந்திர பஸ்சில் போலீசார் இன்று சோதனை செய்த காட்சி.

பஸ்களில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் சோதனை

Published On 2022-10-06 09:39 GMT   |   Update On 2022-10-06 09:39 GMT
  • சோதனைச்சாவடிகளில் 3 சுழற்சிகளாக ஆய்வு
  • சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

வேலூர்:

ஆந்திர மாநிலத்துடன் வேலூர் மாவட்ட எல்லை சுமார் 80 கிலோமீட்டர் கொண்டதாக உள்ளது. பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சயனகுண்டா சோதனைச்சாவடிகள் உள்ளன. கஞ்சா கடத்தல் தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆனால், மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்கள் வழியாக சுலபமாக வந்து செல்ல முடியும் என கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்துடன் இணைக்கும் கிராம அளவிலான அனைத்து பாதைகள் குறித்த விவரங்களையும் உட்கோட்ட அளவில் போலீசார் சேகரித்துள்ளனர்.

இங்கு சோதனையை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து இனி வேலூர் மாவட்டம் வழியாக ஒரு கிலோ கஞ்சாவும் கடத்த முடியாத அளவுக்கு சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தர விட்டுள்ளார்.

மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் 3 சுழற்சிகளாக சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பஸ்களில் இன்று போலீசார் சோதனை நடத்தினர்.

Tags:    

Similar News