உள்ளூர் செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க போலீசார் சோதனை செய்த காட்சி.

பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க போலீசார் தீவிர சோதனை

Published On 2022-10-22 15:18 IST   |   Update On 2022-10-22 15:18:00 IST
  • 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை
  • போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்

வேலூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெயில் நிலையங்கள் மற்றும் ெரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரெயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.

இதை மீறுபவர்களை ெரயில்வே சட்டப்பிரிவு 164-ன்கீழ் கைது செய்து, ரூ.1,000 அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய ெரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

காட்பாடி ரெயில் நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

ரெயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பயணிகளின் உடமைகளை ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் ஆய்வு செய்த வருகின்றனர்.

காட்பாடி வழியாக செல்லும் மேலும் ரெயில் பெட்டிகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. ரெயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல கூடாது என்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோட்டீசுகளை வழங்கினர்.

Tags:    

Similar News