நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையத்தில் மேயர் சுஜாதா ஆய்வு செய்த காட்சி.
கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்ட நாய்களுக்கு பெயிண்டு அடையாளம்
- மேயர் சுஜாதா தகவல்
- வேலூரில் பிடிக்கப்படும் பகுதியில் மீண்டும் விடப்படும்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் நாய் தொல்லை தடுக்க மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 1200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் வேலூர் முத்து மண்டபம் அருகே உள்ள நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையத்தை இன்று மாநகராட்சி மேயர் சுஜாதா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இதுவரை 1132 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் 1200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள ரூ.10 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
அடையாளம்
ஒரு வார்டில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அதே வார்டில் விடப்படுகிறது. அப்போது அந்த வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் எங்கள் பகுதியில் அதிகமான நாய்களை கொண்டு வந்து விடுகிறீர்கள் என்று புகார் தெரிவித்தனர்.
அதை தடுக்கும் வகையில் வார்டு வாரியாக பிடிக்கப்படும் நாய்களுக்கு வெவ்வேறு நிறங்களில் நெற்றியில் பெயிண்ட் அடிக்கப்படும்.சிகிச்சை முடிந்த பின்னர் அந்தந்த வார்டுகளில் அந்தந்த நாய்கள் விடப்படும்.
இதுவரை 40 வார்டுகளில் நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 வார்டுகளிலும் நாய்கள் பிடிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் விடுபட்ட நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.