ஒடுகத்தூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கைலாயநாதர் கோயிலின் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ள நடராஜர். சிலைக்கு புனித நீர் தெளித்த காட்சி.
2 ஆயிரம் ஆண்டு பழமையான கைலாயநாதர் கோவிலில் நன்னீராட்டு பெருவிழா
- 6 கால பூஜைகள் நடந்தது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கைலாயநாதர் கோவில் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுககு முன்பு புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து இன்று நன்னீராட்டு பெருவிழா நடைப்பெற்றது.
இன்று காலை கோவில் முன் பிரமாண்ட பந்தல் அமைத்து 6 கால பூஜைகள் செய்து யாகங்கள் நடத்தப்பட்டது.
மேலும் இக்கோவிலில் பித்தளையால் அமையப்பெற்ற நடராஜ சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 5 பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அமைக்கப்பட்டு இருப்பது 6-வது முறையாக பித்தளையில் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
காலை 6.30 முதல் நடராஜர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த விமான கலசத்திற்கு புனித கலச நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து.அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.