உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சியில் புதிய வாகனங்களை கார்த்திகேயன் எம்.எல். ஏ.தொடங்கி வைத்த காட்சி. அருகில் மேயர் சுஜாதா.

வேலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிப்பு, சாக்கடை அடைப்பு நீக்க ரூ.2.6 கோடியில் நவீன வாகனங்கள்

Published On 2023-03-14 14:51 IST   |   Update On 2023-03-14 14:51:00 IST
  • கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்ப டுகின்றன. மேலும் தற்போது பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருகிறது.

இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

வேலூர் மாநகரத்தில் உள்ள 4 மண்டலங்களிலும் குப்பைகள் சேகரித்து வருவதற்காக 20 புதிய மினி லாரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

மேலும் பெரிய அளவிலான பாதாள சாக்கடை குழாய்களில் நீரை உறிஞ்சி அடைப்பு நீக்குவதற்காக ஒரு எந்திரத்துடன் கூடிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

சிறிய பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு நீக்கும் கருவிப் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றும், இது தவிர பாதாள சாக்கடை குழாய்களில் அதிக அளவில் மண் அடைப்பு ஏற்பட்டால் அந்த மண்ணையும் சேர்த்து உறிஞ்சி அடைப்பு நீக்கும் வகையில் நவீன எந்திரத்திடன் கூடிய பெரிய வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News