உள்ளூர் செய்திகள்

சிறுமி, இளைஞருக்கு நவீன செயற்கை கால் பொருத்தம்

Published On 2023-07-13 14:40 IST   |   Update On 2023-07-13 14:40:00 IST
  • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி சாதனை
  • இடது கால் முட்டியின் கீழ் பகுதி அகற்றப்பட்டது

வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் மகள் ஷாலினி (வயது7). இவர் கடந்த 2016-ம் ஆண்டு இடது காலில் அடிபட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அப்போது இவரது இடது கால் முட்டியின் கீழ் பகுதி அகற்றப்பட்டது.

இதனை அடுத்து சிறுமி ஷாலினிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலில் செயற்கை கால் பொருத்தப்பட்டது.

தற்போது அவர் வளர்ந்து விட்ட காரணத்தால் செயற்கை கால் அளவு குறைந்தது. இதனால் அவர் நடக்க முடியாத சூழல் நிலவியது.

இதனை அடுத்து சிறுமி ஷாலினிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 2-வது முறையாக செயற்கை கால் பொருத்தப்பட்டது.

இதேபோல் திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் கார்த்திக் (23) சாலை விபத்தின் போது அவரது வலது கால் முட்டியின் கீழ் பகுதி அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு செயற்கை கால் பொருத்தப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், 2 பேருக்கும் செயற்கை கால் பொருத்திய பிறகு மருத்துவமனையில் நடை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 2 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஷாலினி மற்றும் கார்த்திக் ஆகியோர், கல்லூரி டீன் பாப்பாத்தி முன்பு நடந்து காட்டினார்.

அப்போது உடன் மருத்துவமணை கண்காணி ப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், துறை தலைவர்கள் ஸ்ரீகாந்த், ஜெயசீலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News