கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடந்தது
- ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
- தங்க தேர், ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது
வேலூர்:
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று அதி விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி வேலூர் கோட்டை நுழைவாயில் முதல், கோவில் வளாகம் மற்றும் உள் புறங்க கட்டிடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் கோபுரங்கள் மீது ஜொலித்த மின்விளக்கு அலங்காரம், பொதுமக்கள் அனைவரின் பார்வையை தன் பக்கம் கவர்ந்து இழுத்தது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டதோடு, பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை காலை 5 மணிக்கு 4-ம் காலயாக பூஜையும், 9 மணி அளவில் 4-ம் கால மஹா பூர்ணாஹுதி, பட்டு வஸ்த்ர சமர்ப்பணம் தீபாரா தனை யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனித நீர் நிரப்பட்ட கலசங்களை பல்வேறு ஓமங்களுக்கு பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வரப்பட்டு கோபுரங்கள் மீது எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் 9.30 மணி அளவில் புதிய தங்க தேர், ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடந்தது.
ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சத்தி அம்மா கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அனைத்து மூர்த் திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அளவுக்கு அதிகமாக கூட்டம் குவிந்ததால், கோபுரத்தின் மீது கலச நீர் ஊற்றும் போது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் காணப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தபடி இருந்தனர். கோவில் வளாகத்தில் கூட்டம் குறையாமல் இருந்ததால் பக்தர்கள் வெள்ளத்தில் கோவில் மிதந்தது போல் காட்சி அளித்தது.
பாதுகாப்பு
அளவுக்கு அதிகமான கூட்டத்தால் சாமி தரிசனத்திற்கு நீண்ட நேரம் ஆனது. கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஐகோர்ட்டு நீதிப திகள் மகாதேவன், ஆதிகேசவலு மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆதினங்கள் பலர் கலந்து கொண்டனர். வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் டிரேன் கேமரா மற்றும் பைனோகிளாக் மூலம் கண்காணிகப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.