அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் வெள்ளி கவச அலங்காரம். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அலங்காரம். தோட்டப்பாளையத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம். லாங்கு பஜாரில் சண்முகனடியார் மண்டபத்தில் ஸ்ரீ பக்த அனுமன் சேனை சார்பில் பக்தர்கள் சாமிக்கு பாலபிஷேகம் செய்தனர்.
- கோவில்களில் சிறப்பு பூஜை
- ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
வேலூர்:
மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அனுமன் பிறந்த நாளாகும். அமாவாசை தினத்தில் வரும் அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கொணவட்டத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அதேபோன்று வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ரங்காபுரம் கோதண்ட ராமர் கோவில், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ஏரியூர் ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
புதுவசூர் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.