உள்ளூர் செய்திகள்

பொருட்காட்சி அரங்கின் பிரமாண்ட முகப்பு தோற்றத்தை படத்தில் காணலாம்.

ராட்சத ராஜாளி பறவை வரவேற்கும் பிரம்மாண்ட அரங்குகளுடன் பொருட்காட்சி

Published On 2023-07-10 14:00 IST   |   Update On 2023-07-10 14:00:00 IST
  • வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் அமைந்துள்ளது
  • செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது

வேலூர்:

வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் ராட்சத ராஜாளி பறவை தனது இறக்கைகளை அடித்தபடி குடும்பத்துடன் திரண்டு வரும் மக்களை வரவேற்கும் வகையில் பொருட்காட்சி நடந்து வருகிறது.

கர்ஜிக்கும் சிங்கம், பிளிரும் யானைகள் மற்றும் உருமும் பயங்கர காட்டு மிருகங்கள், கிளிகள், மரங் கொத்தி பறவைகள், ஈமு பறவைகள், பெங்குவின்கள், வண்ண வண்ண பறவைகளை தத்ரூபமாக கண்முன் நிறுத்தும் வகையில் அவைகளின் இயற்கையாக எழுப்பும் சத்தத்துடன் ரோபோட்டிக் வடிவில் அமைந்துள்ளன.

பிரமாண்ட அரங்கத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மிருகங்கள், ராட்சத மிக்கி மவுஸ் உருவம், பறவைகளின் உருவங்கள். உலக தலைவர்களின் தத்ரூப ஓவியங்களு டன் கூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் 30 வகையான செல்பி பாயிண்டுகள் அமைந்துள்ளன.

இவற்றை தாண்டி பொருட் காட்சி அரங்கில் வரும்போது, வீட்டு உபயோக பொருட்கள், மகளிர் அலங்கார பொருட்கள் என 25 வகை யான பொருட்களை விற்கும் கடைகள் அமைந்துள்ளன.

இவற்றில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வரும் போது திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டுகள், 30 ஆயிரம் பந்துகள் மத்தியில் பால்ரவுண்ட் விளையாட்டு, ஸ்னூக்கர், குட்டி கார், குட்டி பைக், குட்டி ஜீப் என குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற அம்சங்கள் இடம்பெற்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

உணவு விற்பனை கடைகள்

இதை தாண்டி வரும் போது பெரிய வெள்ளை அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பாணிபூரி வகைகள், மதுரை ஜிகர்தண்டா என மக்கள் ருசிக்கும் வகையிலான உணவு விற்பனை கடைகள் அமைந்துள்ளன.

மக்களின் எண்டர்டெய்னுக்காக ஜாயின்ட் வீல், ராட்டினம், சுனாமி, பெண்டுலம், பிரேக் டான்ஸ், ஏர்பலூன், குட்டி ரயில், குட்டிக்கார், படகு என பொழுது போக்கு விளையாட்டுக்கள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. '

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இடம்பெற்றுள்ள இப்பொருட்காட்சியை விஜய் டிரேடர்ஸ் உரிமையாளர் மு.சந்திரசேகரன் அமைத்துள்ளார்.

பொருட்காட்சி 48 நாட்கள் நடைபெறும் என்றும், வேலூர் மக்கள் திரண்டு வந்து பொருட்காட்சியை பார்த்து ரசித்து செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News