வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கிய காட்சி.
- சமையல் போட்டி நடந்தது
- ஜி.வி.செல்வம் பரிசு வழங்கினார்
வேலூர்:
காட்பாடி காந்திநகரில் மக்கள் நலச்சந்தை செயல்பட்டு வருகிறது. இதன் ஓராண்டு நிறைவு விழா இன்று காலை நடந்தது. விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜி.வி. செல்வம் பேசியதாவது:-
காட்பாடியில் இயற்கை வேளாண் விவசாயிகளை ஒருங்கிணைத்து மக்கள் நல சந்தை கடந்த ஒராண்டாக சிறப்பாக செயல்படுவது பாராட்தலுக்கு உரியது. இப்பகுதி மக்கள் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு அளித்த காரணத்தினால் சிற ப்பாக நடைபெற்றுள்ளது. மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
.இயற்கை உணவுகளை கொரோனா காலங்களில் நாடி சென்றோம்.மாடு மலைகளில் மேய்ந்தால் நல்ல பால் தரும்.
ஆனால் இன்றைக்கு போஸ்டரை சாப்பிடுகிறது. யானையும் பிளாஸ்டிக்கை சாப்பிடுகிறது. நாம் இயற்கை உணவை உண்ண வேண்டும்.
இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும். இயற்கையை நமது வீட்டிற்கு எவ்வாறு எடுத்து வருவது மண்ணை காப்பது எப்படி தண்ணீரை காப்பது எப்படி என அனைத்தையும் காக்க வேண்டும்.
இயற்கையையும் மண் வளத்தையும் தண்ணீரையும் காக்க வேண்டும். இது போன்ற மக்கள் சந்தையை மக்களாகிய நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். மண் வளம் காப்போம் விவசாயத்தினை காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். விஐடி வயல் இயக்குநர் பேராசிரியர் எஸ்.பாபு இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், மகளிர் மன்ற தலைவி மாலினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்று நடந்த கண்காட்சியில் 100 அரங்குகளில் இயற்கை விவசாயக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மூலிகைகள் மதிப்புக் கூட்டப்பட்டவைகள் , கொல்லிமலை கிழங்குகள், வாழைப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் போல பல புதுமைகளுடன், 101 வகை உணவுகள் இடம்பெற்றன.
மா, பலா, வாழை மற்றும் நுங்கு சிறப்புக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, நாட்டுரக நெல் விதைகள் , கொடி, காய்கறி விதைகள், கிழங்குகள், வங்கிகளின் விவசாய கடன் திட்ட விளக்கங்கள், பட்டு,பருத்தி, மூங்கில் நார் கைத்தறி ஆடைகள், பலவகையான பொடிகள், திண்பண்டங்கள் தொகுப்பாக, அனைத்தும் இயற்கை விவசாயத்தின் உற்பத்திகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.