உள்ளூர் செய்திகள்

பள்ளிெகாண்டாவில் வளம் மீட்பு பூங்காவை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா ஆய்வு செய்த காட்சி.

வளம் மீட்பு பூங்காவில் பேரூராட்சிகளின் இயக்குனர் திடீர் ஆய்வு

Published On 2023-07-16 14:28 IST   |   Update On 2023-07-16 14:28:00 IST
  • பிளாஸ்டிக் மறுசுழற்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
  • குப்பைகள் விரைவில் வெளயேற்றப்படுவதாக கூறினார்

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா பேரூராட்சிகயில் உள்ள வளம் மீட்பு பூங்காவை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி கூறியதாவது:-

பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள 5240 குடியிருப்புகளும், 520 வணிக வளாகங்களில் இருந்து தினமும் சுமார் 5 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.

இந்த குப்பைகள் தரம் பிரித்து, மறு சுழற்சி செய்யப்பட்டு, இயற்கை உரமாக மாற்றி குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது பூங்காவில் 3 டன் இயற்கை உரம் தயார் நிலையில் உள்ளது எனவும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் சிறு துகள்களாக அரைக்கப்பட்டு, தார்சாலை அமைக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் குப்பைகள் விரைவில் வெளயேற்றப்படுவதாக கூறினார்.

இதனையடுத்து கேமரா ன்பேட்டை பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் புனரமைப்பு பணி, குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவை களையும் பேரூராட்சிகளின் இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா (பொறுப்பு), இளநிலை பொறியாளர் சந்தோஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News