உள்ளூர் செய்திகள்

பாலாற்று பாலத்தில் இருந்து இளம் பெண் குதித்து தற்கொலையா?

Published On 2022-11-17 09:51 GMT   |   Update On 2022-11-17 09:51 GMT
  • போலீசார் தீவிர விசாரணை
  • இரவில் பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக பொதுமக்கள் தகவல்

வேலூர்:

வேலூர் பாலாற்றில் தற்போது ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் வரக்கூடிய பழைய பாலாற்றின் பாலத்தின் மேலிருந்து நேற்று இரவு பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததாக விருதம்ட்டு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாக விரைந்து சென்று பாலத்தின் மேலிருந்து பார்வையிட்டனர். மேலும் ஆற்றின் தண்ணீரில் பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இருள் சூழ்ந்து காணப்பட்டது. அங்கு எதுவும் தெரியவில்லை.

ஆற்றில் குதித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாரா? அவரது கதி என்ன அல்லது வேண்டுமென்று யாராவது போலீசாரை அலைக்கழித்தார்களா என்பது தெரியவில்லை.

இன்று காலையில் மீண்டும் போலீசார் பாலாற்று பகுதியில் பார்வையிட்டனர். மேலும் விருதம்பட்டு பகுதியிலிருந்து பெண் யாராவது காணாமல் போனார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை எந்த ஒரு பெண்ணும் காணாமல் போனதாக தகவல் வரவில்லை. ஆற்றில் பெண் உண்மையிலேயே குதித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News