உள்ளூர் செய்திகள்

பார்சலில் செல்போனுக்கு பதில் சோப்புகள் இருந்த காட்சி.

செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்புகள் டெலிவரி

Published On 2023-06-18 14:07 IST   |   Update On 2023-06-18 14:07:00 IST
  • மக்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பகத்தன்மை என்பது குறைந்துள்ளது
  • ஆர்டரை ரத்து செய்து திருப்பி கொடுத்துவிட்டார்

வேலூர்:

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரங்களில் தவறுதலான பொருட்கள் டெலிவரி செய்யும் சம்பவங்கள் நடத்துள்ளது.

இன்னும் சில நேரங்களில் போலியான வணிகர்களிடம் இருந்து போலியான பொருட்களும் டெலிவரி செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பகத்தன்மை என்பது குறைந்துள்ளது.

செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்புகள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஒருவர் ஸ்மார்ட் செல்போன் வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.7,500 மதிப்பிலான செல்போன் வாங்க ஆர்டர் செய்தார்.

நேற்று அவரது முகவரிக்கு செல்போனை டெலிவரி பாய் கொண்டு வந்தார். அப்போது அந்த செல்போன் பார்சலை திறக்கும் முன்பு ஆர்டர் செய்த நபர் இதனை வீடியோ எடுத்தார்.

டெலிவரி பாய், செல்போன் பார்சலை பிரித்தபோது அதில் பாத்திரங்கள் கழுவும் 3 சோப்புகள் இருந்தது. இதனால் ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பார்சலில் சார்ஜர் மற்றும் ஹெட்செட் இருந்தது. செல்போனுக்கு பதில் சோப்புகள் இருந்ததால் அதை அவர் ஆர்டரை ரத்து செய்து திருப்பி கொடுத்துவிட்டார்.

Tags:    

Similar News