உள்ளூர் செய்திகள்
கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர் :
வேலூர் அடுத்த மேட்டு இடையம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). கட்டிட தொழிலாளி. உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த மணிகண்டனை பல்வேறு டாக்டர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் அங்குள்ள அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மணிகண்டன் குடும்பத்தார் பாகாயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணிகண்டன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.