உள்ளூர் செய்திகள்

கைத்தறி ஜவுளி பூங்கா அமைய உள்ள இடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் அமலுவிஜயன் எம்.எல்.ஏ.

கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்கும் இடத்தை கலெக்டர் ஆய்வு

Published On 2023-06-15 14:49 IST   |   Update On 2023-06-15 14:49:00 IST
  • முதலீட்டார்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

தமிழ்நாடு அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை-2019-ன் படி குறைந்த பட்சம் 3 தொழில் கூடங்குளுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் பொருட்டு திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்ய ஏதுவாக முதலீட்டார்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்தா லோசனை கூட்டங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து நேற்று வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் பகுதியில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க ஏதுவான இடம் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர். திருமலை, தொழிலதிபர் எஸ்.செல்வம் உள்பட கைத்தறி நெசவாளர் சங்கத்தினர், விசைத்தறி நெசவாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News