சி.எம்.சி. அருகே பாதாள சாக்கடை மூடி வழியாக பொங்கி வழிந்த கழிவுநீர்
- போக்குவரத்து பாதிப்பு
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
வேலூர்:
வேலூரின் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் குளம் போல் தேங்கியது. பாதை தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த வந்த மழைநீர் கழிவுநீர் கால்வாய்களில் கலந்தது ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை சி.எம்.சி. மருத்துவமனை அருகே சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் குழாய்கள் பதிக்கபட்டுள்ளது.
கழிவுநீருடன் மழைநீர் கலந்ததால், பாதாள சாக்கதை திட்ட குழாயின் மூடி வழியாக கழிவுநீர் பொங்கி வழிந்தது. சாலைகள் முழுவதும் கழிவுநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் கழிவுநீர் பொங்கி வழிந்த பாதாள சாக்கடை திட்ட குழாய் மூடியை சுற்றி வாகனங்கள் செல்லாதவாறு, தடுப்புகள் வைக்கபட்டன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.