உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்த காட்சி.
- கிராம நிர்வாக அலுவலகத்தில் விழிப்புணர்வு
- பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தேசிய காகித பைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், காகிதப்பையின் நன்மைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் வருவாய்த் துறையில் வழங்கப்படும் முதல் பட்டதாரி சான்று, சிறுகுறு விவசாயி சான்று, அடங்கல் உள்ளிட்டவைகளையும் கிராம நிர்வாக அலுவலர், காகிதப்பையில் போட்டு வழங்கினார்.
அப்போது அத்தியூர் கிராமத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகளும், இனி நாங்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம், காகிதப் பையை மட்டுமே பயன்படுத்தவும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.