பிரியாணி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
1 வாங்கினால் 1 இலவச பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்
- ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச் சென்றனர்
- அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
வேலூர்:
காட்பாடியில் புதிய பிரியாணி கடை திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
வேலூர் காட்பாடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி மீன் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் காட்பாடி ஆஸ்கார் தியேட்டர் எதிரில் தம்பி பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது.
அதன் துவக்க விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மேலும் ஒரு சிக்கன் பிரியாணி இலவச என அறிவித்தனர்.
இதனால் ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டனர். காட்பாடி சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கடைக்கு சென்று பிரியாணி வாங்கினர்.
கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.
கடை திறப்பு விழா சலுகையாக 1 பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டதால் ஆவலுடன் பிரியாணி வாங்க வந்ததாக அசைவ பிரியர்கள் தெரிவித்தனர்.
இதனால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.