உள்ளூர் செய்திகள்
- காளை விடும் விழாவில் ேசாகம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் பாகாயம் அடுத்த மேட்டுஇடையம் பட்டியில் நடந்த மாடு விடும் விழாவை காண ஏழுமலை சென்றிருந்தார்.
அப்போது ஒரு காளை திடீரென ஏழுமலையை முட்டியது. இதில் மார்பு, கழுத்துப்பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.