உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரவும் நடந்த காட்சி.

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

Published On 2023-03-15 09:10 GMT   |   Update On 2023-03-15 09:10 GMT
  • வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
  • சாலைகள் உடனடியாக சீர் அமைக்க வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாநகர 2-வது மண்டல தலைவர் கோபி தலைமை தாங்கினார்.

18-வது வார்டு தலைவர் முருகன் வரவேற்புரை வழங்கினார்.மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ஜெகன்நாதன், எஸ்எல்.பாபு, மகேஷ், மாவட்ட பொருளாளர் தீபக், மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் நரேந்திரன் சிறப்புரை யாற்றினார். உண்ணா விரத போராட்டத்தில் பாஜகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 18-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் சுமதி மனோகரன் மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடைகிறது.

'மக்கள் பிரச்சனைகளில் முழு வேகத்துடன் செயல்பட்டு கொண்டு இருக்கும் கவுன்சிலருக்கு மாநகராட்சி நிர்வாகம் எவ்வித ஒத்துழைப்பு வழங்குவதில்லை. காரணம் பா.ஜ.க. உறுப்பினர் என்பதால் வார்டு பிரச்சனை குறித்து ஏற்கனவே பலமுறை கலெக்டர், மேயர், மாநகராட்சி கமிஷ்னர், உதவி ஆணையாளர், மண்டல் குழு தலைவர் ஆகியோர்க்கு மனுக்கள் வழங்கியுள்ளோம். எவ்வித முன்னேற்றமும் இல்லை. வார்டில் உள்ள பிரச்சனைகள் சாமுவேல் நகர் மக்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படு வதில்லை. எஸ் பி ஆபீஸ் பின்புறம் உள்ள சாலை மற்றும் தண்டு மாரியம்மன் கோயில் சாலை (ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சத்துவாச்சாரி கானார் தெரு, ஸ்கூல் தெரு, சாவடி தெரு, மடம் தெரு, சன்னதி தெரு. பள்ளத் தெரு ஆகிய தெருக்கள் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தோண்டப்பட்டு மக்கள் நடமாட முடியாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.

ஸ்கூல் தெரு தினசரி 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் தெரு. இதனையும் மாநகராட்சி நாங்கள் பலமுறை எடுத்து கூறியும் நடவடிக்கை இல்லை.

வரும் நாட்களில் சத்துவாச்சாரி முருகர் கோவில் மற்றும் கெங்கை யம்மன் கோவிலில் திருவிழா காலம் என்பதால் சுவாமிகள் திருவீதி உலா வரும். ஆகவே உடனடியாக சரி செய்ய வேண்டும் .

சி.எம்.சி. காலனி மற்றும் ராகவேந்திரா நகர் விடுபட்ட உள் சாலைகள் உடனடியாக சீர் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News