உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 7 கடைகளுக்கான ஏலம்

Published On 2023-06-22 14:36 IST   |   Update On 2023-06-22 14:36:00 IST
  • 7-வது முறையாக இன்று நடந்தது
  • 6 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது

வேலூர்:

வேலூர் மாநகராட்சி யில் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.753 கோடியில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட் டது.

பஸ் நிலையம் பராமரிப்பு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. மாநகராட் சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் 87 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகள் இன்னும் பயன் பாட்டிற்கு வரவில்லை. கடை ஏலம் விடுவதில் பல தடைகள் ஏற்பட்டது.

6 முறை ஏலம் நடப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த மாதம் 7-வது முறை யாக ஏலம் நடந்தது. இதில் ஒரு வழியாக 7 கடைகள் மட்டுமே ஏலம்போனது.

இதனை தொடர்ந்து இன்றும் 7 கடைகளுக்கு மட்டுமே ஏலம் கேட்டு 9 பேர் வந்திருந்தனர். அதன் படி 7 கடைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள கடைகளும் விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News