உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த காட்சி.

கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

Published On 2023-01-06 15:31 IST   |   Update On 2023-01-06 15:31:00 IST
  • குடியாத்தம், அணைக்கட்டில் உள்ள கோவில்களில் நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று காலை நடைபெற்றது.

இதனையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், உற்சவர் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகள் வீதிஉலா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், கே.எம்.ஜி கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, விழா குழுவைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, பி.ஈஸ்வரவேல், டி சங்கரலிங்கம், வி. பிச்சாண்டி, எம்.கே.கணபதி, ஆடிட்டர் கிருபானந்தம் உள்பட குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் சிவவிடை கைங்கரிய சங்கத்தின் சார்பில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கைலாசநாதர் கோவில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர் கோவில், ஒடுகத்தூர் சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் ஆலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News