உள்ளூர் செய்திகள்

அன்பழகன் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி

Published On 2023-02-09 10:57 GMT   |   Update On 2023-02-09 10:57 GMT
  • தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடக்கிறது
  • வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்

வேலூர்:

தமிழியக்கம் - விஐடி பல்கலைக்கழகம் இணைந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படக்கண்காட்சி வேலூர் வி.ஐ.டி. அண்ணா அரங்கில் நாளை மறுதினம் சனிக்கிழமை நடக்கிறது. வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைக்கிறார்.

11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி ஆகிய 2 நாட்களும் காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிடலாம். அன்பழகனின் நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், பேராசிரியர் அன்பழகனின் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உள்ள புகைப்படங்கள், பேராசிரியர் அன்பழகன் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் பேராசிரியரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

பேராசிரியரின் வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட லட்சியப் பயணத்தின் பதிவுகளாகவும் 75 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறுகளை காட்சிப்படுத்தும் விதமாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழாவிற்கு விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்குகிறார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருத்தினராக பங்கேற்கிறார்.

கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி முதன்மை விருத்தினராக பங்கேற்கிறார். மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர், வைகோ விழாப் பேருரையாற்றுகிறார்.

வாழ்த்துரை—சட்டமன்ற உறுப்பினர்கள் அ. பெ. நந்தகுமார் (அணைக்கட்டு), ப. கார்த்திகேயன் (வேலூர்), அ. வெற்றியழகன் (வில்லிவாக்கம்), மேயர் சுஜாதா, ஜெயரஞ்சன் ஆகியோர் வாழ்த்தி ேபசுகின்றனர்.

Tags:    

Similar News