உள்ளூர் செய்திகள்

மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு அ.தி.மு.க. மீது பழிபோடுவதா?

Published On 2023-06-27 14:11 IST   |   Update On 2023-06-27 14:11:00 IST
  • மத்திய அரசு கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது
  • முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

குடியாத்தம்:

குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனியின் மகள் திருமணம் நாளை நடைபெற உள்ளது.

இதனையடுத்து அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுக மாவட்ட செயலாளர் த.வேலழகன் உள்ளிட்ட அதிமுகவினர் நேற்று மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கூறியதாவது:-

உதய் திட்டத்தில் கையெழுத்துயி ட்டதால்தான் மின்கட்டண உயர்வு என தமிழக முதல் அமைச்சர் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

உதய் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயத்திற்கு மீட்டர் வைக்க கூடாது, 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க கூடாது என்ற சட்டத்தை எடுத்தால் தான் நாங்கள் கையெழுத்து போடுவோம் என தெரிவித்து அதனை எடுத்த பின்னரே கையெழுத்திட்டோம். வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலின் அந்த சட்டத்தை பார்த்து கொள்ளட்டும்.

அதனை காரணம் காட்டி செயல்படுத்த முடியாமல் திறமை இல்லாத காரணத்தால் கட்டணத்தை உயர்த்தி விட்டு எங்கள் மீது பழி சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தை நன்றாக படித்துப் பார்க்கட்டும்.

இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள பகலில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மின்கட்டணம் குறைப்பு, இரவில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை மின்கட்டணம் தொழிற்சாலைகளுக்கு அதிகம், வீடுகளுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் மாநில அரசு அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது, எப்போதுமே மத்திய அரசு ஒரு கருத்தை சொல்லுவார்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது அது நம்முடைய விருப்பம் தான்.

ஏற்கனவே தொழிற்சாலைகள் நசிந்து கொண்டிருக்கிறது. அந்த மின்கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News