கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. பைக்கில் சென்ற காட்சி.
தெள்ளை மலை கிராமத்திற்கு பைக்கில் சென்று கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
- வழியில் 10 இடத் தில் காணாறுகள் செல்கிறது
- 9 இடங்களில் தரைப் பாலம் அமைகிறது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் கணி யம்பாடி ஒன்றியம், துத்தி க்காடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டகுடும்பத் தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும்இல்லை.இதனால் அவ சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்து விட்டால் அவரது உடலை கூட டோலி கட்டி தான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும் வழியில் 10 இடத் தில் காணாறுகள் செல்கிறது. ரேஷன் பொருட்கள் உள் ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகு திக்கு நடைபயணமாக செல் கின்றனர்.
துத்திக்காடு கிராமத்தில் இருந்து மலை கிராமத்திற்கு செல்ல ஆற்று வழி தவிர வேறு எந்த வழியும் இல்லை.
இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிரா மம் வரை சாலை அமைத்துக் கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு 3 அடிஅகலத் தில் சாலையும், கடந்து செல்ல 9 இடங்களில் தரைப் பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதி உடன் தடையில்லா சான்று வழங் கப்பட்டுள்ளது.
ரூ.7.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. முதல் கட்டமாகசாலைடர் அளவீடு செய்யும் பணி செய்து முடிக்கப்பட்டது.
தெள்ளை மலை கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
குண்டும், குழியுமாகபோக் குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கிடந்த சாலையில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார்கள் செல்ல முடி யாத சூழல் நிலவியது.
இதன் காரணமாக கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் மோட்டார்சைக்களில் சென்று சாலைகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பைக்கை ஓட்ட எம்.எல்.ஏ. நந்தகுமார் அமர்ந்து உட்கார்ந்து சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குனர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு,கணியம்பாடி ஒன்றியக் குழு துணை தலைவர் கஜேந் திரன், ஊராட்சி மன்ற தலை வர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.