உள்ளூர் செய்திகள்
- படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது தடுமாறி கீழே விழுந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பாகாயம் அருகே உள்ள பள்ளஇடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39) இவரது வீடு சாலை வரை அமைந்துள்ளது. இன்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது லாரி ஒன்று வந்தது. அந்த நேரத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் எதிர்பாராத விதமாக லாரி கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக லாரி டிரைவர் சிவாஜி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.