பைக், செம்பு கம்பி திருடியதாக 2 பேர் கைது
- ரூ.2.50 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தர வின் பேரில், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட் சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குடியாத்தம் கஸ்பா அரசமர தெருவை சேர்ந்த விஷ்ணு என்ற வசீகரன் (வயது 21), மொய் தீன்பேட்டை பிரான் நகரை சேர்ந்த ஆசிம் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் குடியாத்தம் நடுப்பேட்டை மற்றும் தரணம்பேட்டை பகுதிகளில் பைக் திருடியதும், தரணம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடை யில் 8 கிலோ செம்பு கம்பிகளை திருடியதும், அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட பைக் என்பதும் மேலும் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் கஸ்பா சுடுகாடு பகுதியில் மறைத்து வைத்திருந்த பைக்குகள், 8 கிலோ செம்பு கம்பிகளை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்ணு, ஆசிம் ஆகியோரை கைது செய்தனர்.